முன்னேறுவோம் ..முன்னேற்றுவோம்
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம் .எனது பெயர் ஏணி (புனைபெயர்தான் ) இந்த தளத்தின் முக்கிய விஷயங்கள் மூன்று :கல்வி ,தன்னம்பிக்கை,சுயமுன்னேற்றம். ஏன் இந்த மூன்றும் ..? (மத்ததெல்லாம் தான் நம்ம தமிழ் பிளாகர்கள் எழுதீட்ராங்களே). நமது இந்தியாவின் இளைஞர்களின் இளைஞர்,'கனவு'நாயகர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் லட்சியமான 2020 இந்திய வல்லரசு நாடாக (நல்லரசு நாடானால் இன்னும் நல்லாருக்கும் ) வேண்டுமெனில் இந்த மூன்றும் தான் முக்கிய தேவை .எனவேதான் இந்த தளத்தில் இவற்றைப்பற்றி பதிவு செய்யவுள்ளேன் .நிறை குறைகளை பதிவு செய்யுங்கள் .நன்றி

சில வருடங்களுக்கு முன் அதாவது நமது சுதந்திர பொன்விழா நடந்துகொண்டிருந்த ஆண்டில் வாசிங்க்டன் போஸ்ட் எனும் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையில் கீழ்க்கண்ட செய்தி பிரசுரமாகியிருந்தது ;
'இந்தியா திடீரென்று ட்ராகனாகவோ ,புலியாகவோ மாறாது ,மாறவும் அதனால் முடியாது .ஏனெனில் இந்தியா ஒரு யானை ,மிகுந்த நினைவாற்றல் கொண்டது ,அபார பலம பொருந்தியது ,ஆனால் வேகம் மட்டும் சற்றே குறைவானது எனினும் லட்சியம் உறுதியாக கொண்டது .ஒரு முறை தனது லட்சியத்தை நோக்கி நகர ஆரம்பித்தால் நிச்சயம் லட்சியத்தை அடையும் வரை எவராலும் அதனை தடுக்க முடியாது ..அப்படிப்பட்ட யானை இப்போது நகர ஆரம்பித்துவிட்டது .'
இந்த செய்தியின் மூலம் நமக்கு விளங்குவது என்னவெனில் , இந்தியா நிச்சயம் மிகப்பெரிய சாதனை நாடாக மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது தான் .இதைப்பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும் .

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு சந்தோசமான செய்தி ..நீங்கள் கல்லூரி மாணவரா..? உங்களுக்கு உங்கள் பாடப்பிரிவுக்கான புத்தகங்கள் வேண்டுமா ..? ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த தளத்தில் கல்வி கற்க தேவையான புத்தகங்களை இலவசமாக தருகிறார்கள் . உங்களுக்கு அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனுக்கோ தேவைப்பட்டால் இந்த தளத்திற்கு செல்லுங்கள் ..விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள் .
தளத்தின் பெயர் : jgvvbookbank

வாழ்வில் முன்னேற மிக அவசியமானது தன்னம்பிக்கை தான் .தன்னம்பிக்கை உள்ளவனால்தான் மிகப் பெரிய அளவில் சாதிக்க முடியும் ..
தன்னம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்தாலே தெரியும் ..தனது குறிக்கோளை அடைய எதுவெல்லாம் தேவையோ அதை தெளிவு படுத்திக்கொண்டு அதை மட்டுமே கருத்திற் நிறுத்தி செயல்படுவான் எதற்காகவும் குறைபட்டுகொள்ள மாட்டான் (இது மட்டும் இருந்திருந்தால் ,இப்படி மட்டும் நடந்திருந்தால் ...?)
தனது குறிக்கோளை அடையும் வரை விடாமுயற்சியுடன் முயற்சித்துக்கொண்டே இருப்பான் .தன்னை நேசிப்பதை போலவே பிறரையும் தன்னை சுற்றிஇருப்பவரையும் நேசிப்பான் ,மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பான் ,மற்றவர்கள் தன்னை எப்படியெல்லாம் நடத்த வேண்டுமென்று நினைக்கிறானோ அதுபோலவே மற்றவர்களை அவன் நடத்துவான் .
வீண்ப் பேச்சுக்களில்,விவாதங்களில் பங்கெடுக்காமல் பேச்சை விட செயல் முக்கியம் என்பதில் கவனமாயிருப்பான் .சதா சர்வ காலமும் தனது லட்சியத்தில் உள்ள ஆர்வத்தை குறைத்துக் கொள்ளாமல் ஒரே சமநிலையில் வைத்துக்கொள்வான்.
உழைக்கும் போது வெற்றியை பற்றி எண்ணி க்கொண்டிருக்காமல் தனது செயலில் ,கடமையில் கருத்தாக செயல்படுவான் ,மிக முக்கியமாக ...முன்னேற விரும்புபவன் தன்னைப் பற்றி மிக நன்றாக புரிந்து வைத்திருப்பான் ,எந்த விசயத்தையும் தள்ளிபோடமாட்டான் ,மொத்தத்தில் உற்சாகமாக இருப்பான் உற்சாகமாக உழைப்பான் (முடிஞ்சுதா ...இன்னும் ஏதாவது இருக்கா..? )
இப்படியெல்லாம் இருப்பவனைப் பார்த்தாலே தெரியும் இவன் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருப்பவன் என்று .அப்படிப்பட்ட தன்னம்பிக்கை உடையவனாக நாமும் இருக்கலாமே ....?

நீங்கள் பாடசாலை மாணவரா?
தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா?
ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா?
பலவருடங்கள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றும் ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கவலையடைந்துள்ளவரா? எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ இது உங்களுக்கான வலைத்தளம். எவரும் மிக இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடிய பாடத்திட்டம்.விரும்புவோர் எந்த வயதினராயிருந்தாலும் இணைந்து கற்கலாம்.
இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் சகல Grammar Patterns களையும் உள்ளடக்கிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது.
தளத்தின் பெயர்:aangilam.blogspot.comஇப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிப்பதற்கும் இணையத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ளலாம்.
THANKS TO ARUN.

இணைய தளங்களின் மூலம் நாம் பல விஷயங்களை இலவசமாக கற்றுக்கொள்ள முடியும் . இன்று இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகிற நிலையில் வெப் தளத்தை வடிவமைக்கும் வித்தைகளை கற்று வைத்திருப்பவர்கள் நிறைய தேவைப் படுகிறார்கள் .நாம் நமது ஊரில் இதனை ஏதேனும் கல்வி நிறுவனத்தில் கற்றுகொண்டாலும் நமக்கு கற்றுத் தருபவர்கள் எந்த அளவில் கற்று வைத்திருக்கிறார்களோ அந்த அளவில்தான் நாமும் கற்றுக்கொள்ள முடியும் .
இத்தகைய நிலையில் நமக்கு அடிப்படையிலிருந்து, முழுமையான வெப் தளத்தை வடிவமைக்கும் வரை மிக எளிமையாக நமக்கு புரியும் வண்ணம் கற்று தருகிறார்கள் இந்த தளத்தில் .விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள் சிறிதாவது கற்று வைத்துக்கொள்ளுங்கள் .உங்களுக்கு மட்டுமல்ல உங்களது குழந்தைகளுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள் .
தளத்தின் பெயர் : www.w3schools.comஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இணையத் தேவைகளுக்கு ஏற்றார்ப்போல் நாமும் வளர வேண்டாமா ...?