ஏணிகள் முன்னேற விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது

முன்னேறுவோம் ..முன்னேற்றுவோம்

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம் .எனது பெயர் ஏணி (புனைபெயர்தான் ) இந்த தளத்தின் முக்கிய விஷயங்கள் மூன்று :கல்வி ,தன்னம்பிக்கை,சுயமுன்னேற்றம். ஏன் இந்த மூன்றும் ..? (மத்ததெல்லாம் தான் நம்ம தமிழ் பிளாகர்கள் எழுதீட்ராங்களே). நமது இந்தியாவின் இளைஞர்களின் இளைஞர்,'கனவு'நாயகர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் லட்சியமான 2020 இந்திய வல்லரசு நாடாக (நல்லரசு நாடானால் இன்னும் நல்லாருக்கும் ) வேண்டுமெனில் இந்த மூன்றும் தான் முக்கிய தேவை .எனவேதான் இந்த தளத்தில் இவற்றைப்பற்றி பதிவு செய்யவுள்ளேன் .நிறை குறைகளை பதிவு செய்யுங்கள் .நன்றி

Thursday, July 9, 2009

தன்னம்பிக்கை உடையவன் எப்படி இருப்பான் ...?



வாழ்வில் முன்னேற மிக அவசியமானது தன்னம்பிக்கை தான் .தன்னம்பிக்கை உள்ளவனால்தான் மிகப் பெரிய அளவில் சாதிக்க முடியும் ..

தன்னம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்தாலே தெரியும் ..தனது குறிக்கோளை அடைய எதுவெல்லாம் தேவையோ அதை தெளிவு படுத்திக்கொண்டு அதை மட்டுமே கருத்திற் நிறுத்தி செயல்படுவான் எதற்காகவும் குறைபட்டுகொள்ள மாட்டான் (இது மட்டும் இருந்திருந்தால் ,இப்படி மட்டும் நடந்திருந்தால் ...?)

தனது குறிக்கோளை அடையும் வரை விடாமுயற்சியுடன் முயற்சித்துக்கொண்டே இருப்பான் .தன்னை நேசிப்பதை போலவே பிறரையும் தன்னை சுற்றிஇருப்பவரையும் நேசிப்பான் ,மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பான் ,மற்றவர்கள் தன்னை எப்படியெல்லாம் நடத்த வேண்டுமென்று நினைக்கிறானோ அதுபோலவே மற்றவர்களை அவன் நடத்துவான் .

வீண்ப் பேச்சுக்களில்,விவாதங்களில் பங்கெடுக்காமல் பேச்சை விட செயல் முக்கியம் என்பதில் கவனமாயிருப்பான் .சதா சர்வ காலமும் தனது லட்சியத்தில் உள்ள ஆர்வத்தை குறைத்துக் கொள்ளாமல் ஒரே சமநிலையில் வைத்துக்கொள்வான்.

உழைக்கும் போது வெற்றியை பற்றி எண்ணி க்கொண்டிருக்காமல் தனது செயலில் ,கடமையில் கருத்தாக செயல்படுவான் ,மிக முக்கியமாக ...முன்னேற விரும்புபவன் தன்னைப் பற்றி மிக நன்றாக புரிந்து வைத்திருப்பான் ,எந்த விசயத்தையும் தள்ளிபோடமாட்டான் ,மொத்தத்தில் உற்சாகமாக இருப்பான் உற்சாகமாக உழைப்பான் (முடிஞ்சுதா ...இன்னும் ஏதாவது இருக்கா..? )

இப்படியெல்லாம் இருப்பவனைப் பார்த்தாலே தெரியும் இவன் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருப்பவன் என்று .அப்படிப்பட்ட தன்னம்பிக்கை உடையவனாக நாமும் இருக்கலாமே ....?

0 comments: