ஏணிகள் முன்னேற விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது

முன்னேறுவோம் ..முன்னேற்றுவோம்

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம் .எனது பெயர் ஏணி (புனைபெயர்தான் ) இந்த தளத்தின் முக்கிய விஷயங்கள் மூன்று :கல்வி ,தன்னம்பிக்கை,சுயமுன்னேற்றம். ஏன் இந்த மூன்றும் ..? (மத்ததெல்லாம் தான் நம்ம தமிழ் பிளாகர்கள் எழுதீட்ராங்களே). நமது இந்தியாவின் இளைஞர்களின் இளைஞர்,'கனவு'நாயகர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் லட்சியமான 2020 இந்திய வல்லரசு நாடாக (நல்லரசு நாடானால் இன்னும் நல்லாருக்கும் ) வேண்டுமெனில் இந்த மூன்றும் தான் முக்கிய தேவை .எனவேதான் இந்த தளத்தில் இவற்றைப்பற்றி பதிவு செய்யவுள்ளேன் .நிறை குறைகளை பதிவு செய்யுங்கள் .நன்றி

Friday, July 3, 2009

Full Web Building Tutorial. இலவசமா கத்துகோங்க


இணைய தளங்களின் மூலம் நாம் பல விஷயங்களை இலவசமாக கற்றுக்கொள்ள முடியும் . இன்று இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகிற நிலையில் வெப் தளத்தை வடிவமைக்கும் வித்தைகளை கற்று வைத்திருப்பவர்கள் நிறைய தேவைப் படுகிறார்கள் .நாம் நமது ஊரில் இதனை ஏதேனும் கல்வி நிறுவனத்தில் கற்றுகொண்டாலும் நமக்கு கற்றுத் தருபவர்கள் எந்த அளவில் கற்று வைத்திருக்கிறார்களோ அந்த அளவில்தான் நாமும் கற்றுக்கொள்ள முடியும் .

இத்தகைய நிலையில் நமக்கு அடிப்படையிலிருந்து, முழுமையான வெப் தளத்தை வடிவமைக்கும் வரை மிக எளிமையாக நமக்கு புரியும் வண்ணம் கற்று தருகிறார்கள் இந்த தளத்தில் .விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள் சிறிதாவது கற்று வைத்துக்கொள்ளுங்கள் .உங்களுக்கு மட்டுமல்ல உங்களது குழந்தைகளுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள் .

தளத்தின் பெயர் : www.w3schools.com


இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இணையத் தேவைகளுக்கு ஏற்றார்ப்போல் நாமும் வளர வேண்டாமா ...?

0 comments: